செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (10:39 IST)

டெல்லியை ரவுண்டு கட்டும் காற்று மாசு, கொரோனா! – நான்காம் அலைக்கு வாய்ப்பு!

டெல்லியில் காற்று மாசுபாடும், கொரோனாவும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நான்காம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது. ஆனால் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், காற்று மாசுபாடும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது வரை டெல்லியில் மூன்று கட்ட கொரோனா பரவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது காற்று மாசுபாடு, குளிர் அதிகரித்து வருவதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு மக்கள் நிறைய கூட வாய்ப்புள்ளதாலும் நான்காம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.