வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (22:14 IST)

டெல்லி: அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் மணீஸ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில்  மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லி சட்டப்பேரவையில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் உள்ள இரண்டு அமைச்சர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ( பாஜக) ராம்வீர் சிங் பிதூரி தெரிவித்து, அமைச்சர்வையை மாற்ற வேண்டுமென்று கூறியிருந்தார்.

இதையடுத்து, புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி கைதாகியுள்ள மணீஷ்சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவர்களின் ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சத்யேந்தர் ஜெயின் ஏற்கனவே பணமோசடி வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.