கொரோனாவை தடுக்க சிறப்பு யாகம்! – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Thirupathi
Prasanth Karthick| Last Updated: ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:23 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் கொரோனாவை தடுக்க சிறப்பு யாகம் செய்யப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 107 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனத்திற்கு வருபவர்களை காத்திருப்பு அறையில் வைக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வருபவர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்து திரும்ப வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அறங்காவலர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு யாகம் நடத்த இருப்பதாகவும், திருப்பதி வருபவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய 100க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :