திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (17:24 IST)

நடுத்தர, கனரக வாகங்கள் நுழைய தடை..! – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை பூதாகரமாக அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டால் பள்ளி, அலுவலகங்களுக்கு கூட விடுமுறை அளிக்கும் நிலை உள்ளது. முக்கியமாக குளிர்காலங்களில் வாகனங்களின் புகையும் சேர்ந்து அடர்த்தியான புகை மண்டலமாக மாறி மக்கள் சுவாசிக்கவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் எதிர்வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டும் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்கால காற்று மாசை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.