இன்றுடன் முடிவடையுமா விவசாயிகள் போராட்டம்! – 7ம் கட்ட பேச்சுவார்த்தை!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கடந்த 40 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சிவார்த்தைகளிலும் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், முந்தைய 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு – விவசாயிகள் இடையேயான 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.