1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (15:45 IST)

முதல்வராகும் ஆசையில்லை டெல்லி முதல்வர் !

டெல்லி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி யூனியன்  பிரதேசத்தின்   70 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத் தேர்தல் வரும் பிபரவரி 08 ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. 
 
டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், கிரேட்டர் கைலாஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
நாட்டின் தலைநகர் டில்லியின் முன்னேற்றத்திற்காக தான் ஓட்டு வேண்டுமே அன்றி முதல்வர் ஆகும் ஆசை எனக்கில்லை என தெரிவித்தார்.
 
மேலும், டெல்லியில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்காக கடின உழைப்பை அளித்துள்ளோம்.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நிர்பயா நிதி அனைத்தும் உள்துறை அமைச்சர் அமித்சாவிடம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.