புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (06:47 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் சவாலுக்கு பாஜக பதிலடி!

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே டெல்லியில் அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பி, பாஜகவினர்களுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை எங்களால் தைரியமாக சொல்ல முடியும். பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்
 
இந்த கேள்விக்கு டெல்லி பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில், ’அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படத்தை பதிவு செய்து ’இந்த முகத்தை விட அழகான திறமையான முகங்கள் பாஜகவில் அதிகம் உள்ளது’ என்று பதிலடி கொடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியும், டெல்லி பாஜக டுவிட்டரில் கொடுத்த பதிலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது