திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:10 IST)

எம்.எல்.ஏ சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்றவர்கள் யார்? அதிர்ச்சியில் அரசியல் கட்சி

aam admi mla
எம்.எல்.ஏ சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்றவர்கள் யார்? அதிர்ச்சியில் அரசியல் கட்சி
ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரை அவரது கட்சியினரே சட்டையை பிடித்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ  சம்பித் பத்ரா என்பவர் நேற்று இரவு 8 மணி அளவில் தனது கட்சித் தொண்டர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார் 
 
திடீரென அந்த கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவின் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது கட்சியினரே சென்றனர் 
 
மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அவர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயந்து ஓட தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran