திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (17:58 IST)

தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் திருடிய மகள் மீது வழக்கு!

money
தந்தையின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் மோசடி செய்து காதலனுக்கும் அவரது குடும்பத்திற்கும் கொடுத்ததாக மகள் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனின் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக தந்தையின் வங்கி கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களில் ரூபாய் 12 லட்சம் வரை கையாடல் செய்ததாக தெரிகிறது
 
தந்தைக்கு தெரியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக காதலனின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்து வந்தது தற்போது அம்பலமாகி உள்ளது
 
இதனை அடுத்து இளம்பெண், அவருடைய காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலனுக்காக தந்தையை ஏமாற்றி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த மகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran