வெள்ளி, 25 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:28 IST)

ஒடிசாவை உலுக்கிய டானா புயல்: உடனடியாக உதவுவதாக சொன்ன பிரதமர் மோடி!

Dana Cyclone

வங்க கடலில் உருவான டானா புயல் ஒடிசாவில் கரையை கடந்த நிலையில் பாதிப்புகளில் தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ‘டானா’ புயலாக உருவான நிலையில் நேற்று ஒடிசாவின் கடற்கரை பகுதியில் கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

இதனால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ள தகவலின்படி, 6,008 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். பாலசோர் மாவட்டத்தில் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
 

 

அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

புயல் குறித்து ஒடிசா முதல்வரிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

 

Edit by Prasanth.K