திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (18:09 IST)

தலித் சிறுமியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் 11 வயது தலில்த் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்த பின்னர் இரண்டு பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 11 வயது தலித் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். சிறுமியின் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இறுதியில் அந்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கால்வாய் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 
கால்வாயிலிருந்து உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட அந்த சிறுமியை ஒன்றுக்கு மேற்பட்டோர் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதே நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் காணவில்லை எனவும், அவர் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்ததையடுத்து, 28 வயதான பிரதீப் குமார் மற்றும் 22 வயதான சாகர் என்ற இருவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
 
இந்த விசாரணையில் அவர்கள் சிறுமியை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். கடந்த சனிக்கிழமை சிறுமியை கடத்தி அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது சிறுமி அவர்களை தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் சிறுமியை கொலை செய்துவிட்டு, உயிரிழந்த சிறுமியின் உடலுடன் உடலுறவு கொண்டுள்ளனர்.
 
பிரேதத்துடன் உடலுறவு கொண்டபின்னர் உடலை மறைத்து வைத்துவிட்டு தப்பிவிட்டதாக அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.