1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (16:30 IST)

நவம்பரில் இந்திய சர்வதேச திரைப்பட விழா: கலந்து கொள்ளும் தமிழ்ப் படங்கள்

நவம்பர் 20 முதல் 28 வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளும் தமிழ்ப் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறவுள்ளது. நவம்பர் 20 - 28 வரை நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் ஒருசில தமிழ்ப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
முதல்கட்டமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் சம்யுக்த விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், காதன் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
Non feature film பிரிவில் பிரவீன் செல்வம் இயக்கிய 'நன்செய் நிலம்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva