டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 28 ரயில்கள் ரத்து!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
டானா புயல் காரணமாக நாளை, அதாவது அக்டோபர் 23 மற்றும் நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 24, மற்றும் அக்டோபர் 26 ஆம் தேதி இயக்கப்படவிருந்த ரயில் சேவைகளை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படவிருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயும் அறிவித்துள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே டானா புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள், அதாவது சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு மேற்குவங்கத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காரக்பூர் - விழுப்புரம் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், ஹவுரா-திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களை தென்னக ரயில்வே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது, அந்தப் பதிவு இதோ.
Edited by Siva