வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (12:53 IST)

டிக்டாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவங்கள்! – ரேட்டிங்கில் அடிவாங்கிய டிக்டாக்!

நாட்டில் டிக்டாக் செயலியால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளால் அதன் ரேட்டிங்கை குறைத்து பொதுமக்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஆன்லைன் குற்ற சம்பவங்களின் கூடாரமாக மாறி வருகிறது டிக்டாக் செயலி. டிக்டாக் செயலியில் டேன்ஸ் ஆடி, நடித்து வீடியோக்கள் பதிவிடுதால் திரை வாய்ப்பு கிடைக்கும் என டிக்டாக் பக்கம் படையெடுக்கும் பலர் ஒரு புறமிருக்க, மற்றொரு பக்கம் இதன்மூலம் கிடைக்கும் லைக்குகள், ரசிகர்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு இதற்கு அடிமையாகி விடுபவர்களும் அதிகரித்துள்ளனர்.

நாள்தோறும் டிக்டாக் செயலியால் குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுவதும், பலர் தற்கொலை செய்து கொள்வதுமாக இருப்பதால் பலர் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். இதன் பிரதிபலிப்பாக கூகிள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கான மதிப்பீட்டில் பலர் மிகவும் மோசமான மதிப்பீட்டை அளிப்பதுடன், கேவலமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட் செய்தும் வருகின்றனர். இதனால் டிக்டாக் செயலின் கூகிள் ப்ளே ஸ்டார் ரேட்டிங் ஐந்திலிருந்து இரண்டாக மாறியுள்ளது.

சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பதிவிறக்கியுள்ள நிலையில் 24 மில்லியன் பேர் இதற்கு அளித்துள்ள மதிப்பீடு டிக்டாக்கை பெரும் சரிவை சந்திக்க செய்துள்ளது.