செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (15:50 IST)

மழை வெள்ளத்திலும் குதூகலமாய் ஆட்டம் போடும் மக்கள்.. வைரல் வீடியோவுக்கு வரும் வேடிக்கையான கம்மெண்ட்ஸ்

கர்நாடகாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அந்த வெள்ளத்தில் ஒரு கும்பல் மகிழ்ச்சியாக ஆட்டம் போடுகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏராளமான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கர்நாடகாவின் பெலகாவி, பாகல்கோட்டை, யாத்கிரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியான யாமகர்னி கிராமத்தைச் சேர்ந்த சில மக்கள் வெள்ள நீரில் ஆட்டம் போடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலர் வேடிக்கையாக பின்னோட்டம் இட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஒருவர், “மோடி ஆட்சியில், வெள்ளத்திலும் கூட மக்கள் சந்தோசமாக உள்ளனர்” என பின்னோட்டமிட்டுள்ளார்.