அமித்ஷா என்னை கட்சி தாவ சொன்னார்: பெண் எம்பி திடுக்கிடும் புகார்
பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தன்னை கட்சித்தாவ சொன்னதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை பெண் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திரிபுரா மாநிலத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் ராஜசபா எம்பியாக ஜார்னா தாஸ் என்பவர் இருக்கிறார். இவர் தன்னுடைய மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் என்ற வகையில் புகார் அளிக்க அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது மாநிலத்தில் நடந்த வன்முறைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த ஜார்னா தாஸ் எம்பி. இது குறித்து உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
அப்போது இடதுசாரிகள் அத்தியாயம் முடிந்து விட்டதாகவும் அதனால் நீங்கள் பாஜக கட்சிக்கு மாறி விடுங்கள் என்றும் அமித்ஷா கூறியதாகவும், அதனை தான் மறுத்துவிட்டு, நான் திரிபுரா பிரச்சினைகளைப் பற்றிப் பேச உள்துறை அமைச்சர் என்ற முறையில் தான் உங்களை சந்தித்தேன் என்றும், உங்களை பாஜக தலைவராக சந்திக்க வரவில்லை என்றும் என்னுடைய சித்தாந்தம் வேறு உங்கள் கட்சியின் சித்தாந்தம் வேறு, உங்களை எதிர்க்கின்ற வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேனே தவிர உங்கள் கட்சியில் சேர மாட்டேன் என்று கூறி விட்டதாகவும் ஜார்னா தாஸ் தெரிவித்துள்ளார்
அமித்ஷா மீது பெண் எம்பி ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது