திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (19:04 IST)

ஏர் இந்தியா’வை விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது என்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிடம் ஒப்படைக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் டாட்டா நிறுவனம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்றும் எனவே டாடா நிறுவனத்திற்கு விற்கும் நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
 இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி இன்று  தள்ளுபடி செய்தார்