செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:38 IST)

வீடியோ கான்பரன்ஸ்னா அவ்வளவு கொழுப்பா? – தம் அடித்த வக்கீலுக்கு அபராதம்!

நீதிமன்றத்தின் வீடியோ கான்பரன்ஸ் விசாரணையின்போது தம் அடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞருக்கு குஜராத் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களும் வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் முக்கியமான வழக்குகள் தவிர்த்த பிற வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்துள்ளது. அதில் விசாரணையில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ஒருவர் காரில் அமர்ந்த்து புகைப்பிடித்தபடியே வழக்கில் வாதாடியுள்ளார்.

இதனால் கடுப்பான நீதிபதிகள் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் வீடியோ கான்பரன்ஸில் வாதாட வரும் வழக்கறிஞர்கள் வீடுகளிலோ அல்லது தங்கள் அலுவலகங்களில் இருந்தோ மட்டும் வீடியோ கான்பரன்ஸில் வாதாட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.