புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (17:31 IST)

மே 1 வரை ஊரடங்கு: முதலமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் நீடிக்க வேண்டும் என ஒருரி மாநிலங்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன
 
குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்யும் பிரதமர் மோடி, ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் ஒரிசா மாநிலம் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிக்கும் என நேற்று அறிவித்தது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் ஒரிசாவை அது பஞ்சாப் மாநிலமும் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அவர்கள் உறுதி செய்துள்ளார்
 
ஒரிசா மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் அதனைப் பின்பற்றி அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது