1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (14:45 IST)

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

நடிகை அமலா பால் நீச்சல் குளத்தில் பிகினி உடையோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இப்போது நீச்சல் குளத்தருகே நின்றபடி பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.