வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:35 IST)

கொரோனா லாக்டவுனிலும் ஷூட்டிங் – லண்டன் பறந்து சென்ற படக்குழு!

கொரோனா காரணமாக இந்தியாவில் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் படக்குழு ஒன்று சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது  இன்னமும் தளர்த்தப்படவில்லை. ஆனால் சில வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் பெல் பாட்டம் எனும் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த முடிவு செய்த படக்குழு, அதற்காக சிறப்பு அனுமதி பெற்று விமானம் மூலம் லண்டன் சென்றுள்ளது. இந்த படக்குழுவில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகரான தலைவாசல் விஜய்யும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.