1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

உலக பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இந்தியா! – மாநிலவாரி பாதிப்புகள்!

India
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பாதிப்பில் ரஷ்யாவை தாண்டி மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 7 லட்சம் பாதிப்புகளை இந்தியா நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 27 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 19,693 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,433 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,00,064 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,671 பேர் பலியான நிலையில் 1,08,082 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

தமிழ்நாடு – 1,11,151
டெல்லி – 99,444
குஜராத் – 36,037
உத்தர பிரதேசம் – 27,707
மேற்கு வங்கம் – 22,126
தெலுங்கானா – 23,902
ராஜஸ்தான் – 20,164
மத்திய பிரதேசம் – 14,930
கர்நாடகா – 23,474
ஹரியானா – 17,005
அடுத்த கட்டுரையில்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; அடித்து கொன்று ஆற்றில் வீசிய குடும்பம்! – கும்பகோணத்தில் பரபரப்பு!