வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (11:02 IST)

3 ஆம் பாலினத்தவருக்கு ரூ.4,000 & தடுப்பூசி - தமிழக அரசு உறுதி!

3 ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியான ரூ.4,000 மூன்று மாதங்களில் வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் 3 ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கி விட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அடுத்த 3 மாதங்களில் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்படும் என் தெரிவித்தார்.