தொடர்புடைய செய்திகள்
- “அப்படி ஒரு பிரச்சன இருக்குண்ணா ஐபிஎல் விளையாடாதீங்க…” கபில் தேவ் கருத்து!
- 62.66 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!
- இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா கொடுத்த இமாலய இலக்கு: வெற்றி கிடைக்குமா?
- 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் ஆச்சரிய முடிவு
ஒரே நாளில் 2,424 பேர் பாதிப்பு; 15 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,424 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,14,437 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,57,544 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 28,079 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Edited By: Prasanth.K
அடுத்த கட்டுரையில்
