60 ஆயிரமாகக் குறைந்த கொரோனா பாதிப்பு
கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.
இதனையடுத்து மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் தமிழகத்தில் பல மாநிலங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சில மாதங்களாக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 60,471 பேர் கொரொனாவால் பாதிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரேநாளில் சுமார் 60,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரேநாளில் 2,726 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேநாளில் சுமர் 1,17,525 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரொனா இரண்டாம் அலை பரவல் தொடங்கி சுமார் 75 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்து மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.