18 மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Last Updated: புதன், 12 மே 2021 (09:03 IST)

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே சென்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாக இருந்தது. இந்நிலையில் இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக 18 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் 18 மாநிலங்களில் தமிழ்நாடு இல்லை. இங்கே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு 2 நாட்களே ஆகியுள்ளதால், வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :