1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India decreases

15 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!

இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.  

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.   
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 561 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,479 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,48,605 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,72,594  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!