1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (15:21 IST)

ஆஸ்கருக்கு செல்லும் கூழாங்கல் திரைப்படம்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாங்கி வெளியிடவுள்ள கூழாங்கல் திரைப்படம் இப்போது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது.

இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்ப் ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது.

இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இப்போது கூழாங்கல் படமும் இணைந்துள்ளது.