1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:02 IST)

கொரோனா 4 வது அலை வர வாய்ப்பில்லை!!

கொரோனா 4 வது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார்.
 
வரும் ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா 4வது அலை வரும் என்றும் தற்போது கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் ஓரிரு மாதங்களில் 4வது அலை உருவாகக்கூடும் கொரோனா நிபுணர்கள் குழு தலைவர் எச்சரித்தார். 4வது அடுத்து வேகமாக பரவும் என்றாலும் முந்தைய அலைகளை போல தீவிரமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால் 4-வது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் மக்கள் சற்று கவனக்குறைவாக இருக்கிறார்கள். 
 
கொரோனா தற்போது அதிகரித்து இருப்பதற்கு இது தான் முக்கிய காரணம் ஆகும். கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் 4வது அலை வருமோ என்று அச்சப்பட தேவை இல்லை. தற்போதைய நிலவரப்படி 4வது அலைக்கான வாய்ப்பு மிக மிக குறைவுnதான்.