கொரொனா 3 ஆம் அலை; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.
இந்த இரண்டம் அலை தற்போது குறையும் நிலையில் இந்த 2 வது அலைக்கு முக்கிய காரணம் எனக் கூறாப்படும் டெல்டா வகை கொரொனா வைரஸ்தான் உருமாறி புதிய டெல்டா வகையாக தோன்றியுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த டெல்டா வகை அதிகமாகப் பரவும் எனவும், சர்ஸ் கொரொனா வைரஸ் 2 ஆக உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாறியுள்ளதாகவும் இந்த வகை வைரஸ்கள் இந்தியாவில் குறைவாக உள்ளதால் மக்கள் பயப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரொனா 3 ஆம் அலை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 3 ஆம் அலை குழந்தைகளைத் தாக்கும் அபாயம் உள்ளாதால் எந்த நேரமும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுமார் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும். அங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுடன் ஐசியு வசதி படுக்கைகளும் ஏற்படுத்திய வேண்டும்.
அத்துடன் குழந்தைகள் சிறப்பு நல மருத்துவரை மருத்துவமனையில் பொறுப்பு அதிகாரியாக நியமித்தல், மேலும், மருத்துவமனையிலுள்ள பொதுமருத்துவர்கள் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களுக்கு குழந்தைகளுக்கு அவரச சிகிச்சை அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.