வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (10:35 IST)

அடுத்தடுத்து 3 தற்கொலைகள்! காரணம் என்ன? – அதிர்ச்சியில் இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆந்திராவின் ஸ்ரீஹரிஹோட்டாவில் அமைந்துள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள இந்த பகுதியை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவ்வாறாக பணியில் இருந்த சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி என்ற சிஐஎஸ்எஃப் வீரர் பிசிஎம்சி ரேடார் மையத்தின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்கு பீகாரை சேர்ந்த விகாஸ் சிங் என்ற சிஐஎஸ்எஃப் வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று விகாஸ் சிங்கின் மனைவியும், பணியாளருமான பிரியா சிங் நர்மதா விருந்தினர் மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு அடுத்தடுத்து நடந்த இந்த 3 தற்கொலை சம்பவங்கள் இஸ்ரோவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Edit By Prasanth.K