1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (17:42 IST)

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி..! முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு..!!

Sitharamaya
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
 
நில மோசடி வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர  கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, சித்தராமையா ஆளுநரின் இந்த  நடவடிக்கை சட்டவிரோதமானது, அரசியல்சானத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் எந்த தவறு செய்யவில்லை என்றும் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் சதி செய்கின்றன என்றும் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

 
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர், என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், பிரச்னைகளை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மேலிடம்  எனக்கு ஆதரவாக உள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.