ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (20:19 IST)

பாஜகவின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா?- அதிஷி

Atishi
பாஜகவின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
 
பாஜக புகார் அளித்த புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது. பாஜகவின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், தேர்தல் ஆணையத்தின்  நோட்டீஸ் எனக்கு வருவதற்கு முன்பே ஊடகங்களில் பாஜக வெளியிட்டுள்ளது. அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் பாஜகவிடம் அடிபணிந்துவிட்டன என்பது கவலை அளிக்கிறது. தற்போது இப்பட்டியலில்  தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது.
 
ஆம் ஆத்மியின் கட்சியின் பல்வேறு பிரச்சனைகளை பதிவு செய்ய முயற்சித்தும் தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
பாஜகவில் இணையாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என தான் மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  இவ்விவகாரத்தில் அதிஷிக்கு எதிராக சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக பாஜக மீடியாவுக்கு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.