1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:07 IST)

புது ஐடியாவை கையிலெடுத்திருக்கும் காங்கிரஸ்: என்ன ஆகப்போகிறது பாஜக?

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால், காங்கிரஸ் சுயேச்சை வேட்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை அமைக்க இருக்கிறது.மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் ஆட்சியை அமைக்க இருக்கிறது. சத்திஸ்கரில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
இதற்கிடையே ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க 8 சுயேச்சை வேட்பாளர்களுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.