1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (19:04 IST)

வெற்றிமாறனோடு வெப் சீரிஸுக்காக இணையும் பி சி ஸ்ரீராம்!

வெற்றிமாறன் அடுத்து இயக்க உள்ள வெப் சீரிஸில் பணியாற்ற உள்ளதாக பி சி ஸ்ரீராம் கூறியுள்ளார்.

இயக்குனர் அசுரன் வெற்றிக்குப் பிறகு அடுத்த படமாக விடுதலை திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். நீண்ட ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

இதைத் தவிர்த்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்துக்கு கதை திரைக்கதை எழுதி வருகிறார். மேலும் இறைவன் மிகப்பெரியவன் என்ற வெப் சீரிஸ் உருவாக்கத்திலும் பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ஒரு வெப் சீரிஸில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக, ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உறுதி செய்துள்ளார்.