1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:22 IST)

அமைச்சர் உதயநிதி கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மழுப்பலான பதில்..!

அமைச்சர உதயநிதி சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது கருத்தை தெரிவித்துள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அவர்கள் இது குறித்து கூறிய போது ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது கருத்துக்களை கூற சுதந்திரம் உள்ளது என்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு  பதில் அளித்துள்ளார். 
 
அனைத்து மதங்களும் சமம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றும் அனைவரது நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம் என்றும் கே சி வேணுகோபாலன் குறிப்பிட்டுள்ளார் 
 
அமைச்சர் உதயநிதி கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று கூறாமல் மலுப்புலான பதிலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்திருப்பது இந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran