1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 டிசம்பர் 2025 (12:45 IST)

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி தனது நாயுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜ்யசபாவில் சிறப்புரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று ஊடகங்கள் கேட்டபோது, அவர் கிண்டலாக "பவ் பவ்" என்று பதிலளித்துவிட்டு சென்றார்.
 
தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதுபற்றி கவலையில்லை என்று கூறிய ரேணுகா சௌத்ரி, "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாட்டு வண்டியில் வந்தார். நான் எந்த விதியையும் மீறவில்லை," என்று தெரிவித்தார். 
 
மேலும், நாட்டில் மாசு கட்டுப்பாடு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளை விட்டுவிட்டு, தனது நாய் குறித்து அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
விபத்து நடந்த இடத்தில் நாய்க்குட்டியை மீட்டு வந்ததால், வளாகத்திற்கு கொண்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார். ஆனால், பாஜகவின் சம்பித் பத்ரா மற்றும் பிரதீப் பண்டாரி ஆகியோர், ராகுல் காந்தி மற்றும் ரேணுகா சௌத்ரியின் கருத்துகள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதாக கண்டித்துள்ளனர்.

Edited by Siva