வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 செப்டம்பர் 2025 (12:18 IST)

சட்ட திருத்தம்.. நாடாளுமன்றம் கலைப்பு .. அரசியல்வாதிகளின் ஊழல் சொத்துக்கள் பறிமுதல்... நேபாளத்தில் Gen Z வலியுறுத்தல்..!

சட்ட திருத்தம்.. நாடாளுமன்றம் கலைப்பு .. அரசியல்வாதிகளின் ஊழல் சொத்துக்கள் பறிமுதல்... நேபாளத்தில் Gen Z வலியுறுத்தல்..!
நேபாளத்தில் Gen Z நடத்திய போராட்டங்கள் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் கே.பி. ஷர்மா தலைமையிலான அரசு பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட நிலையில், இந்த போராட்டங்களை முன்னெடுத்த இளைஞர்கள், சட்ட சீர்திருத்தம் மற்றும் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை விசாரித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றில் சில..
 
மக்கள் நம்பிக்கையை இழந்த தற்போதைய நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.
 
குடிமக்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் அரசியலமைப்பை முழுமையாக திருத்த வேண்டும் அல்லது புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.
 
இடைக்காலத்திற்கு பிறகு, சுதந்திரமான, நியாயமான மற்றும் நேரடி மக்கள் பங்கேற்புடன் புதிய தேர்தல்களை நடத்த வேண்டும்.
 
கடந்த 30 ஆண்டுகளாக அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை விசாரித்து, சட்டவிரோதமான சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்.
 
கல்வி, சுகாதாரம், நீதி, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய ஐந்து அடிப்படை நிறுவனங்களைச் சீரமைக்க வேண்டும்.
 
Edited by Mahendran