1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (09:51 IST)

தேர்தலில் போட்டியிடுவதற்காக 45 வயதில் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட காங்கிரஸ் பிரமுகர்..!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 45 வயதில் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வரும் மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராம்பூர் நகராட்சி முன்னாள் தலைவர் காங்கிரஸ் பிரமுகர்  மமூன் ஷா கான் என்பவர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இந்த தொகுதி திடீரென மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து 45 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்த  மமூன் ஷா கான் இரண்டு நாட்களில் சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்யாமல் வாழ திட்டமிட்டு இருந்தேன் என்றும் ஆனால் எனது தொகுதி மகளிருக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டேன் என்றும் என் மனைவி நகராட்சி தலைவருக்கு போட்டி விடுவார் என்றும் தெரிவித்தார்

காங்கிரஸ் சார்பில் ஒருவேளை எனது மனைவிக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் சுயேச்சையாக என் மனைவி களத்தில் இறங்குவார் என்றும்  மமூன் ஷா கான் கூறியுள்ளார்.

Edited by Siva