வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:30 IST)

இஸ்லாம் மதவிதியை மீறி திருமணம்....முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புகார்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு புஷ்ரா பீபீ என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில், விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இஸ்லாம் மத சட்டப்படி, ஒரு பெண்ணின் கணவர் உயரிழந்தாலோ, அல்லது அவர் திருமணமானவரை விவாகரத்து செய்தாலோ அந்தப் பெண் மீண்டும் மறுமணம் செய்துகொள்ள 3 மாதம்( இத்தாத் காலம்) காத்திருக்க வேண்டும்.

இந்த மதவிதியின்படி இல்லாமல், புஷ்ரா பீபியை இத்தாத் காலம் முடியும் முன்பே இம்ரான் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஏற்கனவே ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனம் கூறி வரும் இம்ரான் கானுக்கு இது புது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.