செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (07:15 IST)

மம்தாவை எதிர்த்து வேட்பாளரா? காங்கிரஸ் அதிரடி முடிவு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது
 
சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி மிகப்பெரிய வெற்றிபெற்ற போதிலும் நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவர் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார் என்பதும் 6 மாதத்திற்குள் அவர் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அங்கு மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் பாஜக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது 
 
மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்றும் அவருடைய வெற்றிக்காக காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதால் மம்தா பானர்ஜி வெற்றி உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.