புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:40 IST)

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார் இருப்பினும் அவர் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆறு மாதத்திற்குள் முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது 
 
மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் முதலமைச்சர் போட்டியிடுவதாகவும் அவரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. முதல்வர் பதவியில் தொடர வேண்டுமானால் திரிணாமுல் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது