இரண்டு மனைவி இருந்தால் ரூ.2 லட்சம்: காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு..!
இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில் அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் காந்தி லால் என்பவர் இந்த திட்டத்தை தொடர்புபடுத்தி ஒருவருக்கு இரண்டு மனைவி இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளோம், அது அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும், எனவே ஒருவர் இரண்டு மனைவிகளை கொண்டவராக இருந்தால் அந்த இருவரும் அந்த திட்டத்தின் கீழ் வருவார்கள், இருவருக்கும் தலா ஒரு லட்சம் என மொத்தம் 2 லட்சம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். காந்திலாலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Edited by Siva