80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அதிசயம்! வானிலை ஆர்வலர்கள் தகவல்..!
80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் வால் நட்சத்திரம் தென்பட தொடங்கியுள்ளதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய மண்டலத்தில் நுழைந்துள்ள C/2023 ஏ3 என்ற அரிய வகை வால் நட்சத்திரம் கடந்த 14 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை இந்தியாவில் தென்படும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ல்டாக் ஆகிய பகுதிகளில் இரவில் இந்த வால் நட்சத்திரத்தை பார்க்க முடியும் என்றும், தொலைநோக்கி அல்லது பைனாகுலர் வழியாக தெளிவாக பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அரிதாகவே இந்தியாவில் வால் நட்சத்திரம் தெரியும் நிலையில் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் இந்த வால் நட்சத்திரம் தெரியும். இதையடுத்து இரவில் பல வானிலை ஆர்வலர்கள் வானத்தை நோக்கி அந்த வால் நட்சத்திரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran