செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (08:07 IST)

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை!

Mulayam singh
முலாயம் சிங் யாதவ் உடல்நிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை!
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார் 
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் அவர்களின் உடல்நிலை கவலை அளிக்கிறது என்றும் அவர் விரைந்து குணமாவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் அவர்கள் மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Edited by Siva