வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:15 IST)

எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய முதல்வர்

Diwali 1
தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கியுள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படு  என அரசு அறிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு அறிவித்ததாவது: தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதில் ரூ.490 வழங்கப்படும். 10 கிலோ அரிசி 2 கிலோ சர்க்கரைக்குப் பதில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவித்தது.

மேலும்,  3.37 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 490 வழங்க ரூ.16.53 கோடி அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் தலா 500 பட்டாசு பெட்டிகளும், 500 கிலோ இனிப்புகளை பரிசாக முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ளார்.

இதனால், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.