1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (09:48 IST)

அரசு வேலைக்காக காத்திருக்கும் 64.22 லட்சம் தமிழக இளைஞர்கள்! – தமிழக அரசு தகவல்!

தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 64.22 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தது முதல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. 10வது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை ஏராளமானோர் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் மாத நிலவரப்படி தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உள்ளது. இவர்களில் 29,80,071 பேர் ஆண்கள். 34,41,766 பேர் பெண்கள். ஆண்களை விட பெண்களின் பதிவு அதிகமாக உள்ளது.

மேலும் 46 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் 2,47,847 பேர் பதிவு செய்துள்ளதாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6,787 பேர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K