1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (12:45 IST)

வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ள இந்தியா மார்ட் நிறுவனம்!!

இந்தியா மார்ட் நிறுவனம் முதல் முறையாக ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது.

 
தினக்கூலி, வாரக்கூலி ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது என்றாலும் ஒரு பெரிய நிறுவனம் வார சம்பளம் முறையை அமல்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த முயற்சியை இந்தியா மார்ட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் சம்பளத்திற்காக காசோலை ஊழியர்களுக்கு அளிக்கப்படும். 
 
இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி இது குறித்து கூறியதாவது, வார சம்பளம் ஊழியர்களுக்கு வெகுவாக பயனளிக்கும். இதன்மூலம் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.