போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தடை! – விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் விமான போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் விமான சேவையில் அதிகம் பயன்படுத்தும் விமானம் போயிங் 737. இந்த விமானத்தில் அதிகமான பயணிகளை ஏற்ற முடியும் என்பதுடன், இதை இயக்குவதிலும் அதிக அளவு கவனம் தேவை.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமாக மொத்தம் 11 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களை இயக்குவதற்கு 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். போயிங் ரக விமானங்களை இயக்க 650 விமானிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் அதில் 90 விமானிகள் முறையாக பயிற்சி பெற்றவர்கள் இல்லை என கூறி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், அவர்கள் போயிங் 737 ரக விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளது.