நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் : நீதிமன்றம் கருத்து
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கியவர்கள் அனைவரும் உயிருடன் இருக்க வேண்டும் என் இறைவனை வேண்டிக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று மேகாலயவில் ஜைந்தியா மலையில் உள்ள எலிப்பொந்து என்ற சிறிய சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சென்றபோது மற்றொரு வழியாக ஆற்றுநீர் புகுந்தது. இதில் சிக்கிய 15 தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்படவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் ராணுவ வீரர்களை ஏன் உதவிக்கு கோரவில்லை என உச்சநீதிமன்றன் சராமறியாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதனையடுத்து சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்கள் உயிரோடு இருக்கவேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், சுரங்கத்தினுள் சென்றவர்கள் உயிருடன் இருந்தாலும் இல்லையென்றாலும் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.